ரயில் கட்டணம் உயராது: ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி அறிவிப்பு
டெல்லி: பயணிகள் ரயில் கட்டணம் உயராது என்று மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நிதியைப் பெருக்க விலையேற்றம் ஒரு தீர்வாகாது. நாம் ஏழை, எளிய மக்களைப் பற்றியும் நினைத்துப் பார்க்க வேண்டும். ரயில்வே உள்கட்டமைப்பை முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டும். இந்த துறையை பாதுகாப்பானதாக ஆக்க அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு வர வேண்டும். புதிய திட்டங்களை நிறைவேற்ற நிதி தேவைப்படுகிறது. ஆனால் நிதி பற்றாக்குறை இருப்பதால் பல திட்டங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
ரயில்வே துறையில் அரசியல் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும். ஒரு கட்சி ஆட்சியில் உள்ளபோது கொண்டு வரும் திட்டம் அடுத்த கட்சியின் ஆட்சியில் நிறுத்திவைக்கப்படுகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ரயில்வே துறையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
ஒரு ரயில்வே அமைச்சர் தனது காலத்தில் ஒரு கொள்கையைக் கொண்டு வருகிறார். அடுத்த அமைச்சர் வரும்போது அந்த கொள்கையை தூக்கிப்போட்டுவிட்டு புதுக் கொள்கையை அறிமுகப்படுத்துகிறார். இது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications