பிணவறையில் பெண்ணில் உடலை ருசிபார்த்த எலிகள்: ராஜஸ்தானில் நடந்த அவலம்
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடலை எலிகள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தின் பீவார் நகரில் உள்ளது அம்ரித் கௌர் அரசு மருத்துவமனை. அங்கு பிரேத பரிசோதனைக்காக ஜானகி தேவி(24) என்ற பெண்ணின் உடல் கொண்டு வரப்பட்டது. பிணவறையில் வைக்கப்பட்டிருந்த அந்த பெண்ணின் உடலை கடந்த 12ம் தேதி இரவு எலிகள் கடித்து குதறியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தார் ஆத்திரமடைந்தனர். மருத்துவமனையின் கவனக்குறைவால் தான் இவ்வாறு நடந்துள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மருத்துவமனை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் இது போன்ற சம்பவம் கடந்த 3 நாட்களுக்கு முன்பும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோத்பூரில் உள்ள மதுரா தாஸ் மாதுர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயது வாதமடித்த முதியவரின் காதுகள், மூக்கு, உதடுகள் மற்றும் கன்னங்களை எலிகள் கடித்தன. இதனால் அவர் காயம் அடைந்தார். இதையடு்தது பணி நேரத்தில் தூங்கிய மருத்துவமனை ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications