புயலில் கரும்பு விளைச்சல் பாதிப்பு - சந்தையில் கடும் விலை உயர்வு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுத்தோறும் கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை களை கட்டுவது வழக்கம். இந்த நிலையில் தமிழகத்தை தாக்கிய தானே புயலால், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்பு பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு சேதமடைந்தன.
பெரும்பாலான கரும்புச் செடிகள் புயலில் சாய்ந்துவி்ட்டதால் குறைந்தளவே வெட்டி எடுக்கப்படுகின்றது. இதனால் தேவைக்கு ஏற்ப கரும்பு கட்டுகள் சந்தைக்கு வருவதில்லை. பொங்கல் பண்டிக்கைக்கு கரும்பு மிக முக்கியம் என்பதால், சிதம்பரத்தில் பன்னீர் கரும்பு ஒன்றுக்கு ரூ.40 என்று விற்கப்படுகின்றது. மேலும் சிதம்பரத்தில் சில இடங்களில் கரும்புகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடலூரில் மஞ்சள் பயிர்கள் புயலில் சேதமடைந்ததால், நாகையில் இருந்து மஞ்சள் கொத்துகளை கொண்டு வரப்பட்டு, சிதம்பரத்தில் விற்கப்படுகின்றது. இதனால் மஞ்சள் கொத்துகள் ஒன்றுக்கு ரூ.15 என்று விற்கப்படுகின்றது.
திருப்பூரில் ரூ.30:
திருப்பூரில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்பு விளைச்சல் குறைந்த அளவில் நடைபெற்றது. மேலும் அறுவடைக்கு ஆள்பற்றாக்குறை, போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட பிரச்சனைகளால் திருப்பூரில் ஒரு கரும்புக்கு ரூ.30 என்ற விலையில் விற்கப்படுகின்றது.
மேலும் போகிப் பண்டிகையை யொட்டி, தொழுவு, ஊதியூர், கருமாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சொற்ப அளவிலேயே பூளைப்பூ, ஆவாரம்பூ கொண்டு வரப்பட்டிருந்தது; கடும் தட்டுப்பாட்டை அடுத்து பூளைப்பூ, ஆவாரம்பூ உள்ளிட்டவை ஒரு கட்டு ரூ.15 என்று விற்பனையானது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications