உலகமெங்கும் பொங்கல்.. ஒரு பார்வை!
தமிழகத்தில் பொங்கல் பண்டிக்கை எந்த அளவிற்கு உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறதோ, அதேபோல வெளிநாடுகளில் உள்ள தமிழர்களாலும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
ஆண்டு முழுவதும் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் சூரியன், மழை, பனி உள்ளிட்ட இயற்கை சக்திகளுக்கும், கடவுளுக்கும் நன்றி செலுத்தும் பண்டிகையாக பொங்கலை முன்னோர்கள் கொண்டாடினர்.
பிற்காலத்தில் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும், புத்தரசி மூலம் பொங்கல் வைக்கும் பழக்கத்தை பின்பற்றினர். பொங்கல் பண்டிகையின் ஒருபகுதியாக விவசாய பணிகளுக்கு பயன்படும் மாடுகளுக்கும் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். முன் காலங்களில் தமிழகத்தில் மட்டுமே பொங்கல் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் மற்ற நகரங்களுக்கும், தேசங்களுக்கும் தமிழர்கள் மூலம் பரவியது.
பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீடுகளில் அதிகாலையில் எழுந்து குளித்து சாமி கும்பிட்டு, பொங்கல் இடுவது வழக்கம். மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகளை வழங்கி, வாழ்த்துகளை தெரிவிப்பர்.
நவீன கண்டுபிடிப்புகள், தொழிற்நுட்ப வளர்ச்சி மூலம் உலகம் கைக்குள் அடங்கிவிட்டது. இதனால் தமிழர்கள், தங்களின் சொந்த ஊர்களை விட்டு, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று படித்து, வேலை செய்து வருகின்றனர். ஆனால் தமிழர்கள் எங்கு சென்றாலும் தமிழரின் பண்டிகைகளையும், பண்பாட்டையும், வழக்கங்களையும் மறப்பதில்லை.
வெளிநாடுகளில் பொங்கல் பண்டிகை:
வெளிநாடுகளில் பணி, படிப்பு உள்ளிட்ட வாழ்க்கையின் சில கட்டாயத்தினால், பல தமிழ் குடும்பங்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றது. ஆனால் தீபாவளி, பொங்கல் உள்ளி்ட்ட பண்டிகைகளை கொண்டாட வெளிநாட்டு வாழ் தமிழர்கள் மறப்பதில்லை. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
ஆப்பிரிக்காவில் பொங்கல்:
ஆப்பிரிக்காவில் அதிகளவில் தமிழர்கள் வசித்து நிலையில், அங்கு 250க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் உள்ளன. இதனால் பொங்கல் விழா ஆப்பிரிக்காவில் தேசிய பண்டிக்கையாக கொண்டாடப்படுகின்றது.
ஆப்பிரிக்காவில் உள்ள இந்து கோவில் சங்கம் சார்பில் ஆண்டுத் தோறும் பொங்கல் பண்டிக்கை, தமிழகத்தில் கொண்டாடுவது போல சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பொங்கல் கொண்டாட்டங்களின் போது, தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் தமிழர்களுடன், ஆப்பிரிக்க மக்கள் சேர்ந்து கொள்கின்றனர்.
ஐரோப்பாவில் பொங்கல்:
ஐரோப்பாவில் உள்ள பிரிட்டன், பிரான்ஸ் உள்ள நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், அங்கு தமிழ் சங்கங்களை ஏற்படுத்தி உள்ளனர். இந்த தமிழ் சங்கங்களின் மூலம் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஒருங்கிணைந்து பொங்கல் பண்டிகையை ஆண்டுத்தோறும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஜெர்மனியில் பொங்கல் பண்டிகை 4 நாட்களாக கொண்டாடப்படுகின்றது. மேலும் இத்தாலி, டென்மார்க், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்களாலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
ஆசியாவில் பொங்கல்:
ஆசியாவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள நாடுகளான இந்தோனேஷியா, சிங்கப்பூர், மலேசியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் அதிகளவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றது. இதனால் பொங்கல் பண்டிகை மேற்கண்ட நாடுகளில் ஆண்டுத் தோறும் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகின்றது.
தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாறைசாற்றும் எண்ணற்ற இந்து கோவில்கள் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் உள்ளன. கரும்பு, காய்கறிகள் உள்ளிட்டவை மூலம் தயாரிக்கப்படும் பொங்கல் கடவுளுக்கு படைக்கப்பட்டு, பல கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது. பொங்கல் பண்டிகை மேற்கண்ட நாடுகளில் மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படுகின்றது.
துபாயில் பொங்கல்:
அரேபிய நாடுகளான துபாய், ஓமன், கத்தார் உள்ளிட்ட நாடுகளிலும் பொங்கல் பண்டிக்கை கொண்டாடப்படுகின்றது. துபாய், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள குறிப்பிட்ட இந்து கோவில்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஷேச பூஜைகள் நடத்தப்படுகின்றன. செளதி அரேபியா, குவைத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடுவது வழக்கம்.
ஆஸ்திரேலியாவில் பொங்கல்:
தீவு நாடுகளான ஆஸ்திரேலியா, நியூஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்களால்
பொங்கல் பண்டிகை பல முறைகளில் கொண்டாடப்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் 10க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் உள்ள நிலையிலும், தமிழ் கலாச்சார முறையில் இங்கு பொங்கல் கொண்டாடப்படுவதில்லை.
நியூஸ்லாந்தில் தமிழர்களின் எண்ணிக்கை பெருகி வருவதை தொடர்ந்து, தமிழ் சங்கம் அமைத்து தமிழ் பண்பாட்டை எடுத்துரைக்கும் பொங்கல் போன்ற பண்டிகைகள் கொண்டாட முயற்சிகள் நடந்து வருகின்றது.
அமெரிக்காவில் பொங்கல்:
அமெரிக்காவில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். இதனால் அமெரிக்காவில் உள்ள இந்து கோவில்களில், தமிழகத்தை போலவே பொங்கல் வைத்து கொண்டாடப்படுகின்றது. கனடாவில் உள்ள தமிழர்களும், பொங்கலை முன்னிட்டு, இனிப்புகள் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications