சோனியா போஸ்டரில் கருப்பு மை வீச்சு: ராம்தேவ் ஆதரவாளர் கைது
டெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு வெளியே ஒட்டப்பட்டிருந்த அக்கட்சி தலைவர் சோனியா காந்தியின் போஸ்டரில் கருப்பு மை அடித்த பாபா ராம்தேவின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை பத்திரிக்கையாளர் கூட்டத்தில் யோகா குரு பாபா ராம்தேவின் முகத்தில் ஒருத்தர் கருப்பு மை தெளித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மை தெளித்தவரை ராம்தேவ் ஆதரவாளர்கள் நையப் புடைத்தனர்.
டெல்லி அக்பர் ரோட்டில் உள்ளது காங்கிரஸ் தலைமையகம். அதன் வெளிச்சுவரில் அக்கட்சி தலைவர் சோனியா காந்தியின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று மாலை 4.45 மணி அளவில் அங்கு வந்த பாபா ராம்தேவின் ஆதரவாளர் திருபுவன் சிங் என்பவர் சோனியாவின் போஸ்டரில் கருப்பு மை தெளித்தார்.
மத குருவை அவமானப்படுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூச்சலிட்டுள்ளார்.
இதனால் அங்கிருந்த காங்கிரஸார் கடு்பபாகி திரிபுவனைப் பிடித்து அடித்தனர். அதற்குள் ராம்தேவ் ஆதரவாளர்களும் அங்கு வரவே இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திரிபுவனைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications