எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை பயணம்-யாழ்ப்பாணத்தில் தமிழர்களிடம் வீடுகள் ஒப்படைப்பு

மேலும், தமிழர்கள் மறுகுடியமர்வு தொடர்பாக இலங்கை அரசுடன் எஸ்.எம்.கிருஷ்ணா பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வசதி, ரயில்வே, தொலைத்தொடர்பு, விவசாயம் ஆகிய 4 துறைகளில் இலங்கைக்கு உதவுவது தொடர்பாக கிருஷ்ணா பேச்சு நடத்தவுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது அதிபர் மகிந்த ராஜபக்சே, பிரதமர் ஜெயரத்னே, தமிழ் தேசிய கூட்டணி, ஸ்ரீலங்கன் முஸ்லிம் காங்கிரஸ் உள்பட இலங்கையின் பல்வேறு தலைவர்களை கிருஷ்ணா சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களூக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா நேரில் சென்று மறுவாழ்வுப் பணிகளை பார்வையிடவுள்ளார். இலங்கையின் வடக்குப் பகுதியில் சுமார் 49,000 வீடுகள் கட்டித் தர இந்தயா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையின் நினைவிடத்துக்கும் கிருஷ்ணா செல்கிறார்.
மீனவர் பிரச்னை-இரு நாட்டு அதிகாரிகள் பேச்சு:
இந் நிலையில் இன்று இந்திய- இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சனைகள் குறித்து இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை கொழும்பில் நடந்தது.
ஒரு நாட்டு கடல் எல்லையில் அடுத்த நாட்டு மீனவர் நுழைவது, பாதுகாப்பாக மீன்பிடிப்பது, அடுத்தவர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் நடந்து கொள்வது, இரு நாட்டு மீனவர்களும் கைதாகும் சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொள்வது ஆகியவை குறித்து பேசப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகள் உதவியை நாடும் ராஜபக்சே:
இதற்கிடையே ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் அரபு நாடுகள் பலவும் இலங்கை அரசை கைவிடலாம் என செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், ஆப்பிரிக்க நாடுகளின் ஆதரவை நாடியுள்ளார் ராஜபக்சே.
இது தொடர்பாக அந் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அவசர சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
செனகல் நாட்டின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் மற்றும் ராணுவ அமைச்சர் ஆகியோரையும் சந்தித்துவிட்டு, புர்க்கினோ பாசோ நாட்டின் ஜனாதிபதியையும் சந்தித்துப் பேசவுள்ளார் பெரீஸ்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications