சபரிமலையில் மகரஜோதி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்

Subscribe to Oneindia Tamil

சபரிமலை: நேற்று மாலை 6.45 மணி அளவில் சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரிந்தது. இதனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.

மகரஜோதியையொட்டி ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வெள்ளம் அலை மோதியது. பகல் 3 மணிக்கு பம்பைக்கு திருவாபரணம் வந்து சேர்ந்தது. 6.30 மணிக்கு திருவாபரணம் சுவாமி சன்னதிக்கு கொண்டு வரப்பட்டது.

சரங்குத்தியில் வைத்து தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள், ஐயப்ப சேவா சங்கத்தினர் திருவாபரணத்துக்கு வரவேற்பு அளித்தனர்.

திருவாபரணம் கோவில் சன்னதி வந்த போது கருடன் முன்னே பறந்து வந்து கோவிலை வட்டமிட்டது.

ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கபட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது பொன்னம்பலமேட்டில் 6.45க்கு ஜோதி 3 முறை தெரிந்தது.

ஜோதியை தரிசித்த பக்தர்கள் மலையிலிருந்து இறங்கினர். கடந்த ஆண்டு புல்மேட்டில் மகரவிளக்குக்கு பின்னர் நடைபெற்ற விபத்தில் 102 பேர் இறந்ததால் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.

சுமார் 4,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+