பாபநாசத்தில் பிரியாணிக்குள் மதுபாட்டில்கள்: மடக்கிப் பிடித்த போலீசார்
நெல்லை: பாபநாசத்திற்கு காணும் பொங்கல் கொண்டாட சென்ற சுற்றுலா பயணிகள் வேனில் பிரியாணியில் மது பாட்டில்களை பதுக்கி எடுத்து சென்றனர். இதை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் காணும் பொங்கலன்று பாபநாசத்தில் உள்ள அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவி, பாபநாசம் கோயில், தலையணை போன்ற இடங்களுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்களுக்கு வனத்துறையினர் பல கட்டுபாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக மது பாட்டில்களை மலைக்கு எடுத்து செல்லக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். அதையும் மீறி மதுபாட்டில்கள் கடத்தப்படுவது உண்டு. இதை முற்றிலும் தடுக்கும் வகையில் இன்று வனத்துறையினரும், போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இன்று காலையில் பாபநாசம் வனத்துறை சோதனைச்சாவடியில் முண்டந்துறை புலிகள் காப்பக இணை இயக்குனர் வெங்கடேஷ், வனச்சரகர் இளங்கோ, விகேபுரம் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் வாகனங்களை சோதனையிட்டனர். அப்போது சுற்றுலா பயணிகள் சென்ற வேனில் பிரியாணியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சோதனையில் 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு வேனில் மட்டுமே 24 பாட்டில்கள் இருந்தது. இன்று காலை 9 மணி வரை மலைக்கு 200க்கும் மேற்பட்ட வேன், கார்கள் சென்றுள்ளன. சோதனை போட்ட ஒரு சிலமணி நேரங்களில் மட்டும் இத்தனை பாட்டில்கள் பிடிபட்டுள்ளன. குறிப்பாக வேனில் வந்தவர்கள் தான் அதிக அளவில் பிரியாணியில் மறைத்து வைத்து கொண்டு வந்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் பாட்டில்களை அங்கேயே உடைத்து அழித்தனர். இதே போல் பிளாஸ்டிக் கேரி பேக்குகளையும் பறிமுதல் செய்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications