இது சத்தியமூர்த்தி பவன் சமரச பொங்கல்!!!
சென்னை: கோஷ்டிப் பூசல், பரபரப்பிற்கு பெயர் பெற்ற சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் இணைந்து பொங்கல் கொண்டாடினர். ஜி.கே.வாசன், இளங்கோவன், ஜெயந்தி நடராஜன் ஆகிய அமைச்சர்கள் தொண்டர்களுடன் இணைந்து பொங்கல் உண்டனர்.
சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் காங்கிரஸ் ரகளைகள் மிகவும் பிரசித்தம். இந்நிலையில் பொங்கல் திருநாளை அமைதியான முறையில் கொண்டாடினர் காங்கிரஸ் கட்சியினர். சத்தியமூர்த்தி பவனில் பொங்கல் விழாவிற்காக மிகப் பெரிய ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தொண்டர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் குமரிஅனந்தன், எம்.கிருஷ்ணசாமி எம்.பி., முன்னாள் மந்திரி பூவராகன், ஜே.எம். ஆரூண் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஜி.விநாயகமூர்த்தி, யசோதா, காயத்ரிதேவி, ராணிவெங்கடேசன், மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். அனைவரும் உற்சாகமாக பொங்கல் உண்டதோடு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
விழாவில் மத்திய மந்திரிகள் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோரும் தொண்டர்களுடன் அமர்ந்து பொங்கல் சாப்பிட்டுவிட்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications