இந்திய விமான நிறுவனங்களில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் 49% முதலீடு செய்ய அனுமதி
டெல்லி: இந்திய விமான நிறுவனங்களில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் 49 சதவீதம் அளவுக்கு முதலீடு செய்வதை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கிங்பிஷர் உள்ளிட்ட சில தனியார் விமான நிறுவனங்களின் நெருக்கடிக்குப் பணிந்து, அவர்களுக்கு உதவும் வகையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத் சிங்கும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் நேற்று நடத்திய ஆலோசனைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. விரைவில் இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூடி முடிவு செய்யவுள்ளது.
நேற்றைய சந்திப்பின்போது ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உடனடியாக ரூ. 150 கோடி வழங்கவும் பிரணாப் முகர்ஜி ஒப்புக் கொண்டார். பெரும் நஷ்டத்தில் இயங்கும் இந்த நிறுவனம் தனது பைலட்டுகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு பல மாத சம்பளத்தை நிலுவை வைத்துள்ளது.
இதனால் பைலட்டுகள் வேலைக்கு வராமல் மொத்தமாக விடுமுறை எடுத்து வருவதால், விமானங்களை இயக்க முடியாமல் ஏர் இந்தியா தடுமாறி வருகிறது. நிலுவையில் உள்ள சம்பளத் தொகையில் ஒரு பகுதியையாவது உடனடியாக வழங்க முடிவு செய்துள்ள அஜீத் சிங், நிதியமைச்சகத்திடம் ரூ. 150 கோடியைக் கோரினார். இதை வழங்க பிரணாப் ஒப்புக் கொண்டார்.
மேலும் விவிஐபிக்களுக்காக இயக்கப்பட்ட விமானங்களுக்காகவும், விஐபிகளுக்கு இடம் ஒதுக்கியதற்காகவும் ஏர் இந்தியாவுக்கு பல்வேறு அமைச்சகங்கள் கட்டண பாக்கி வைத்துள்ளன. அந்த வகையில் ஏர் இந்தியாவுக்கு ரூ. 600 கோடியை இந்த அமைச்சகங்கள் தர வேண்டியுள்ளது. இதையும் விரைவில் பெற மத்திய அமைச்சர்களுடன் பேசவும் அஜீத் சிங் முடிவு செய்துள்ளார்.
இப்போது இந்திய விமான நிறுவனங்களில் 49 சதவீத அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெளிநாட்டு விமான நிறுவனங்கள் முதலீடு செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த விதியைத் திருத்தி வெளிநாட்டு விமான நிறுவனங்களும் இந்திய விமான நிறுவனங்களில் 49 சதவீதம் அளவுக்கு முதலீடு செய்வதை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதே போல ஏர் இந்தியாவிலும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுமா என்று கேட்டதற்கு பதிலளித்த அஜீத் சிங், ஏர் இந்தியாவும் ஒரு நிறுவனம் தான். அதில் பணம் போட முதலில் யாராவது முன் வரட்டும். அப்போது அது குறித்து பரிசீலிப்போம் என்றார்.
மேலும் விற்பனை வரி சுமையிலிந்து தப்ப வெளிநாடுகளில் இருந்து நேரடியாக விமான எரிபொருளை இறக்குமதி செய்து கொள்ள தனியார் விமான நிறுவனங்கள் அனுமதி கோரி வருவது குறித்துக் கேட்டதற்கு, இதை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசின் செயலாளர்கள் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இது குறித்து அமைச்சரவையில் பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.
ஏர் இந்தியா இப்போது ரூ. 67,520 கோடி கடனில் மூழ்கி்யுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 23,000 கோடியளவுக்கு முதலீடு செய்ய மத்திய அரசுக்கு செயலாளர்கள் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இதில் ரூ. 6,600 கோடியை வரும் மார்ச் மாத இறுதிக்குள் மத்திய அரசு முதலீடு செய்யும் என்று தெரிகிறது.
மேலும் 28 புதிய போயிங் 787 விமானங்களை வாங்கவும் ஏர் இந்தியா ஆர்டர் கொடுத்துள்ளது. இதை வாங்க பணமில்லாததால், அதை வாங்கி, வேறு லீசிங் நிறுவனத்திடம் விற்றுவிட்டு, பின்னர் அவர்களிடமிருந்தே விமானங்களை வாடகைக்கு எடுத்து இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications