சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் பிரச்சனையை தமிழக அரசு தீர்க்க வேண்டும்- சிபிஎம் கோரிக்கை
சங்கரன்கோவில்: கூலி உயர்வு கோரி போராடி வரும் சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்களின் பிரச்சனையில், தமிழக அரசு உடனடியாக நியாயமான தீர்வு காண வேண்டும் என்று சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் 10,000 விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி முதல் 23 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து போராடி வருகின்றனர். 2011ல் போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 24ம் தேதியுடன் காலாவதியானது. இந்த நிலையில் இது குறித்து தொழிலாளர் துறை அதிகாரி முன்பு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், நியாயமான தீர்வு காணப்படவில்லை.
தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் 40 சதவீத கூலி உயர்வு கோரி விசைதறி தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நியாயமான உடன்பாட்டிற்கு வர மறுப்பதால், விசைத்தறி தொழிலாளர்கள் கடும் துயரம் அனுபவித்து வருகின்றனர்.
இப்பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நியாயமான உடன்பாடு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications