ராணுவ தளபதி வி.கே.சிங்குக்கு கட்டாய விடுமுறை?: மத்திய அரசு திட்டம்
டெல்லி: வயது பிரச்சனை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள இந்திய தலைமை ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ராணுவ தலைமைத் தளபதியாக பதவி வகித்து வருபவர், வி.கே.சிங் என்ற விஜயகுமார் சிங்கின் மெட்ரிகுலேஷன் சான்றிதழில், அவரது பிறந்த தேதி 1951ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், ராணுவப் பணிக்காக அவர் மத்திய பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி நடத்திய ராணுவ அகாடமி தேர்வு எழுதியபோது வி.கே.சிங்கின் பிறந்த தேதி மே 10, 1950ம் ஆண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேதியின்படி கணக்கிட்டால் வருகிற மே 31ம் தேதி அன்று வி.கே.சிங் ஓய்வு பெற வேண்டும்.
ஆனால், தனது பிறந்த தேதி 51ம் ஆண்டு தான் என்று கூறி வரும் சிங், ஓய்வு பெற மறுத்து வருகிறார். இதனால் அடுத்த ராணுவ தளபதியை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில், தங்களை நீதிமன்றத்துக்கு இழுத்த வி.கே.சிங் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு யோசித்து வருகிறது.
நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை கட்டாய விடுப்பில் போகச் செய்வது அல்லது ராஜினாமா செய்ய வைப்பது ஆகிய திட்டங்கள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் அவரை பதவி நீக்கம் செய்வதில்லை என்ற முடிவிலும் மத்திய அரசு உள்ளது. வி.கே.சிங்க்கு அடுத்த சீனியரான கிழக்கு மண்டல ராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் பிக்ரம் சிங்கை அடுத்த ராணுவ தலைமை தளபதியாக தேர்வு செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications