உண்மை தானாக வெளியே வரும்: 'உளவாளி' மாதுரி குப்தா

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் தகவல் தொடர்புத் துறை செயலாளராக இருந்தவர் மாதுரி குப்தா. அவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு இந்திய ரகசியங்களைக் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த 2010ம் ஆண்டு அவரை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். கடந்த 21 மாதங்களாக திகாரில் இருந்த அவர் கடந்த 7 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் இத்தனை நாட்களாக மௌனம் காத்து வந்த மாதுரி பிரபல ஆங்கில டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம்:
கேள்வி: கடந்த 21 மாதங்களாக திகாரில் இருந்தீர்கள். தற்போது ஜாமீனில் விடுதலையாகி இருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: சிறையில் இருந்தது என்னை வலுவான மனுஷியாக்கியுள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு வெளியே வந்துள்ளேன். இனி என் வாழ்க்கையை முதலில் இருந்து துவங்க வேண்டியதுள்ளது.
கேள்வி: இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதாக உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பற்றி?
பதில்: அவை குற்றச்சாட்டுகள் தான், இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அது குறித்து பேச இது உகந்த நேரம் அல்ல.
கேள்வி: ராணா, ஜம்ஷெத் ஆகிய 2 பேருடன் நீங்கள் தொடர்பில் இருந்தீர்கள் என்பது உண்மையா? இன்னும் தொடர்பில் இருக்கிறீர்களா?
பதில்: நான் ஏற்கனவே கூறியதுபோன்று அது குறித்து தற்போது எதுவும் கூற இயலாது. அவை எல்லாம் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்று எனக்குத் தெரியும். வரும் மார்ச் மாதம் 22ம் தேதி இந்த வழக்கு விசாரணை துவங்குகிறது என்பது உங்களுக்கே தெரியும். நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை உண்மை தானாக வெளியே வரும். விசாரணை நடக்கும் போது மக்களே இது பற்றி தெரிந்து கொள்வார்கள்.
கேள்வி: நீங்கள் ஆப்கானிஸ்தான் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்ததுண்டா?, இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதுண்டா?.
பதில்: நான் உருது மொழிபெயர்ப்பாளராக இருந்தேன். பாகிஸ்தானில் 12 முதல் 13 உருது நாளிதழ்கள் உள்ளன. அவை அனைத்தையும் படித்து மொழிபெயர்க்கவே எனக்கு நேரமில்லாமல் இருந்தது. அப்படி இருக்கையில் ரகசியங்களை எங்கே வெளியிடுவது என்றார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications