அப்போ, குடியரசுதின விழா அணிவகுப்பில் யானை இருக்காதா?-மோடி

உத்தர பிரதேசத்தில் தேர்தலை முன்னிட்டு ஆளும் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சிலைகளையும், அம்மாநில முதல்வர் மாயாவதியின் சிலைகளையும் திரை போட்டு மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி அனைத்து சிலைகளுக்கும் திரை போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 26ம் தேதி நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் யானைகள் இருக்காதா என்று குஜராத் முதல்வர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
குடியரசு தினத்தன்று வீர விருது பெறும் குழந்தைகளை யானை மீது அமர வைத்து அழைத்து வருவது வழக்கம். அந்த விழாவில் மட்டும் யானைகளைப் பயன்படுத்துவது தேர்தல் விதிகளை மீறுவது ஆகாதா?
குடியரசு தின விழா அணிவகுப்பில் யானைகளை பயன்படுத்த வேண்டாம் என்று காங்கிரஸ் கூறுமா? டிவி நேரடி ஒளிபரப்பு என்னவாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
யானைகளுக்கு திரை போட்டீர்கள், அடுத்ததாக எனது கட்சியின் சின்னமான லாந்தர் விளக்குகளை எல்லாம் உடைக்கப்போகிறீர்களா என்று ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications