அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு திடீரென மாற்றி அமைப்பு
சென்னை: அதிமுகவின் ஆட்சி மன்றக் குழுவை முதல்வர் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா திடீரென மாற்றியமைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
ஆட்சி மன்றக் குழுத் தலைவராக அதிமுகவின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா இருப்பார்.
குழு உறுப்பினர்களாக
1. இ.மதுசூதனன் (கழக அவைத்தலைவர்),
2. பன்னீர் செல்வம் (கழகப் பொருளாளர் மற்றும் நிதி அமைச்சர்),
3. விசாலாட்சி நெடுஞ்செழியன் (கழக அமைப்புச் செயலாளர்),
4. தமிழ்மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்றச் செயலாளர்),
5. ஜஸ்டின் செல்வராஜ் (கழக சிறுபான்மையினர் நலப்பிரிவுத் தலைவர்),
6. நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் (கழக மருத்துவ அணிச் செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுக அமைப்புச் செயலாளராகவும், ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும் இருந்த மறைந்த அமைச்சர் கருப்பசாமிக்கு பதிலாக டாக்டர் வேணுகோபாலும், முன்னாள் எம்.பி.யான எஸ்.பி.எம்.சையது கானுக்கு பதிலாக தமிழ்மகன் உசேனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் கூட்டணி முடிவு, எம்.பி, எம்.எல்.ஏ., உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம், ஆட்சி மன்றக் குழுவுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தான் இந்த ஆட்சி மன்றக்குழு மாற்றி அமைக்கப்பட்டது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications