கேரளாவில் இன்று பந்த்: தமிழக விரைவுப் பேருந்துகள் நிறுத்தம்
நெல்லை: முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக கேரளாவில் இன்று பந்த் நடந்ததால் நெல்லையில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகள் நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டுவிட்டன.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக தமிழகம் மற்றும் கேரள எல்லைகளில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து கேரளாவில் இன்று பந்த் நடந்தது.
இதனால் கேரளா செல்லும் பேருந்து மற்றும் வாகனங்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் நெல்லை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பி்ல் நெல்லையிலிருந்து கொட்டாரக்கரைக்கு இயக்கப்படும் பேருந்து நேற்று மாலை நிறுத்தப்பட்டது.
மேலும் நெல்லை, தூத்துக்குடி குமரி மாவட்டங்களில் இருந்து கொல்லம், ஆழப்புழை, எர்ணாகுளம் போன்ற நெடுந்தூர பகுதிகளுக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளும் பந்த் நடப்பதை முன்னிட்டு நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டன.
இது தவிர செங்கோட்டை பணிமனையில் இருந்து கேரளா செல்லும் விரைவுப் பேருந்துகளும் நேற்று மாலை முதல் இயக்கப்படவில்லை. மாலை பந்த் முடிந்த பின்னர் சூழ்நிலைக்கு ஏற்ப விரைவுப் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக விரைவுப் போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications