சேதமடைந்த அனைத்து படகுகளுக்கும் நிவாரணம் கிடைக்கும் வரை கடலூர் மீனவர்கள் வேலைநிறுத்தம்
கடலூர்: தானே புயலால் சேதமடைந்த அனைத்து படகுகளுக்கும் நிவாரணம் அளிக்கும் வரை கடலுக்கு செல்லப் போவதில்லை என்று கடலூர் மாவட்ட மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் தாண்டவராயன் சோழகன் பேட்டை முதல் நல்லவாடு வரை உள்ள 48 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1 லட்சம் பேர் மீன்பிடித் தொழிலை நம்பி உள்ளனர் இந்நிலையில் அண்மையில் வீசிய தானே புயலால் அவர்களுக்கு சொந்தமான படுகுகளில் ஏராளமானவை சேதமடைந்தன. புயலால் 82 விசைப் படகுகள், 270 கண்ணாடி இழைப் படகுகள், 729 கட்டுமரங்கள் சேதமடைந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் மேலும் பல படகுகள் சேதமடைந்துள்ளதாகவும், அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதாது என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுவையில் புயலால் சேதமடைந்த அனைத்து படகுகளுக்கும் அம்மாநில அரசு நிவராணம் வழங்கியுள்ளது. அதே போன்று கடலூரிலும் சேதமடைந்த அனைத்து படகுகளுக்கும் நிவாரணம் வழங்கும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லப்போவதில்லை என்று அம்மாவட்ட மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து கடலூர் சார் ஆட்சியர் கிரண் குராலா முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மீன்பிடி படகு உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மீனவர்கள் கேட்பது போன்று நிவாரணம் வழங்க அரசாணையில் இடமில்லை என்று சார் ஆட்சியர் தெரிவித்தார். மேலும் கோரிக்கைகளை எழுதது மூலம் கொடுத்தால் அரசுக்கு அனுப்பி வைப்பதாக அவர் தெரிவித்தார். இதையடு்தது மீனவர்கள் தங்கள் கோரிக்கைகளை எழுதிக் கொடுத்தனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
இது குறித்துத் தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறியதாவது,
டி.எஸ்.பேட்டை முதல் நல்லவாடு வரையிலான 48 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களில் பலர் கடல் நீரோட்டத்தில் மாற்றம், சுனாமி நினைவு தினம் உள்பட பல காரணங்களால் கடந்த டிசம்பர் 23ம் தேதி முதலே கடலுக்கு செல்லவில்லை. புயலால் சேதமடைந்த அனைத்து படகுகளுக்கும் அரசு நிவாரணம் வழங்கும் வரை நாங்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மாட்டோம். எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுவை மாநில மீனவர்களுகம் மீன்பிடிக்க செல்லவில்லை என்றார்.
கடலூரில் மீனவர்களின் போராட்டம் காரணமாக மீன்கடைகள் மூடிக்கிடந்தன. சில பகுதிகளில் வெளியூர்களில் இருந்து மீன்கள் கொண்டு வரப்பட்டு கிலோ ரூ.500க்கு விற்கப்பட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications