இருளர் பெண்கள் பலாத்கார வழக்கு: அரசுக்கு ஹைகோர்ட் கண்டனம்
சென்னை: இருளர் பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீசாரை கைது செய்யாததற்கு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த இருளர் இனப் பெண்கள் 5 பேரை திருக்கோவிலூர் போலீசார் பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று புகார் எழுந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 4ம் தேதி விசாரணைக்கு வந்தபோது இருளர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த போலீசாரை கைது செய்யாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசராணைக்கு வந்தபோது தமிழக அரசு விளக்கம் அளித்தது. அப்போது அரசு சார்பில் கூறப்பட்டதாவது,
இருளர் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்கு பிறகு தான் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் பலாத்காரம் நடந்ததை விசாரணை அதிகாரிகளால் உறுதிபடுத்த முடியவில்லை. அவர்கள் உறுதிபடுத்தாததால் தான் போலீசாரை கைது செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதயைடுத்து நீதிமன்றம் அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்த விவகாரம் குறித்து உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அரசின் பதில் திருப்தியளிக்கவில்லை என்றால் இந்த வழக்கு சிபிஐ வசம் மாற்றப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications