'உடன் வர மக்கள் படையுண்டு, முடிவெடு தலைவா!'-நடராஜன் நடத்திய விழாவில் பேனர்கள்

நடராஜன் மருதப்பா அறக்கட்டளை சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழர் கலை இலக்கிய விழா நடத்தப்படுகிறது. போயஸ் கார்டனிலிருந்து சசிகலா குடும்பத்தினர் விரட்டப்பட்ட நிலையில் தஞ்சையில் இந்த விழா நடந்தது.
விழாவில் மதுரை ஆதீனம் ,மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ண மோகன், கார்கில் போரில் ஈடுபட்ட கேப்டன் அருண் சக்கரவர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் நடராஜன் பேசுகையில், மகிழ்ச்சியோடு வாழ மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு உலகத்தில் வாழ்ந்தால் துன்பமே இருக்காது என்று பாரதிதாசன் தன் கவிதையில் சொல்லியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக தமிழர் கலை இலக்கிய விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு நடக்குமா நடக்காதா என்று பலர் நினைத்தனர்.
நான் இல்லையென்றாலும் எனக்குப் பின்னாலும் இந்த விழா தொடர்ந்து நடக்கும் அளவுக்கு அறக்கட்டளையைப் பலப்படுத்தியுள்ளேன் என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையில் சங்கமம் விழா நடத்தியவர்கள் எல்லாம் திகார் சிறையில் சங்கமமாகும் நிலையில் உள்ளனர். அந்த நிலை நமக்கு வராது. நான் வரவும் விடமாட்டேன். தஞ்சை மக்கள், தமிழ் மக்கள் வளர்ச்சிக்கு என் உயிருள்ள வரை என்றென்றும் பாடுபடுவேன் என்றார்.
தொடர்ந்து பேசிய நடராஜன், பொங்கல் விழாவுக்கு தமிழ் மக்களுக்கு வாழ்த்துச் சொல்ல கொல்கத்தாவிலிருந்து பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ண மோகனும், கார்கில் போரில் போரிட்ட கேப்டன் அருண் சக்கரவர்த்தியும் இங்கே வந்துள்ளனர். நீங்க நினைக்கும் கேப்டன் இவர் அல்ல. இவர் உண்மையான கேப்டன் என்று விஜயகாந்தை மறைமுகமாக வாரினார்.
இந்த விழாவைக் கண்காணிக்க ஏராளமான உளவுப் பிரிவு போலீசாரும் வேட்டி சட்டைகளில் உலா வந்தனர்.
விழாவுக்காக தஞ்சை நகர் முழுவதும் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. 'பட்டம் இல்லாத பேரரசனே', 'மிக்க துணிவு உண்டு. இளைஞர்கள் பக்கத் துணையுண்டு. உடன் வர மக்கள் படையுண்டு, முடிவெடு தலைவா!' ஆகிய வாசகங்கள் கொண்ட பேனர்களும் அடக்கம்.
மேலும், மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை திமுக தலைவர் கருணாநிதி விலக்கிக் கொண்டால், நானே அவர் பின்னால் செல்வேன். எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்தாலும், யார் ஏசினாலும், தூற்றினாலும் நம் வழியில் நாம் செல்ல வேண்டும் என்று நடராஜன் பேசியதாகவும் தகவல்கள் வருகின்றன.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications