மதிமுகவின் வைரத் தூண்களில் ஒன்று சாயந்துவிட்டது: மணச்சநல்லூர் நடராஜன் மறைவுக்கு வைகோ இரங்கல்
திருச்சி: திருச்சி மாவட்ட மதிமுக செயலாளர் மணச்சநல்லூர் நடராஜன் மறைவிற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மணிவிளக்குகளில் ஒன்று அணைந்து விட்டது. வலுவோடு கழகத்தைத் தாங்கி நின்ற வைரத் தூண்களில் ஒன்று சாய்ந்து விட்டது. ஆபத்துகளுக்கு அஞ்சாது களம்காணும் படைக்கருவிகளில் ஒன்றாக உறுதி தந்த வில் முறிந்துவிட்டது.
திருச்சி மாவட்ட மதிமுக செயலாளரும், ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான எனது ஆருயிர் சகோதரர் மணச்சநல்லூர் நடராஜன் மாரடைப்பால் மறைந்துவிட்டார்.
பள்ளிப் பருவத்தில் அண்ணாவின் இயக்கத்தில் சேர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்மாமணியாய் திருச்சி மாவட்டத்தில் திகழ்ந்த லட்சிய வேங்கை நடராஜன் 1993 அக்டோபரில் என்னைத் தாங்கிப் பிடிக்கின்ற தாயின் மடியாக துன்பங்களை எதிர்கொள்ள உதவும் தோளாக கவலை போக்கும் மாமருந்தாக விளங்கி வந்தார். உங்கள் கரத்தைப் பற்றிக் கொண்டேன், என் மூச்சு அடங்கும் வரை உங்களோடு இருப்பேன் என்று அடிக்கடி சொல்வார்.
அவர் சொன்ன சொற்களை நினைக்கும் போது எல்லாம் துக்கம் என் நெஞ்சை அடைக்கிறது. உடம்பெல்லாம் பதறுகிறது.
லட்சோப லட்சம் கழகத் தொண்டர்கள் இதயமெல்லாம் நேசித்த என் உயிரினும் இனிய சகோதரர் இன்று இல்லையே என்பதை நினைத்துப் பார்க்கவே மனம் நடுங்குகிறது. அழுவதற்கும் என் கண்களுக்கு வலுவில்லை, உழைப்பில் உயர்ந்து நேர்மையில் சிகரமாக விளங்கிய இந்த மாவீரனை இழந்து துடிக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications