சாந்தவேலு உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் மறுப்பு: கேரள அரசு ரூ.1 கோடி நிவாரணம் தர கோரிக்கை
சென்னை: சபரிமலையில் வெந்நீர் ஊற்றியதில் படுகாயமடைந்து மரணமடைந்த ஐயப்ப பக்தர் சாந்தவேலுவின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் மறுத்துவிட்டனர். சாந்தவேலுவின் குடும்பத்தினருக்கு கேரள அரசு ரூ.1 கோடி வழங்க வேண்டும், அதுவரை அவரது உடலை அடக்கம் செய்யமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவேற்காட்டைச் சேர்ந்த அய்யப்ப பக்தர் சாந்தவேலு கடந்த 8ம் தேதி சபரிமலைக்கு சென்றபோது, கரிமலை என்ற இடத்தில் மலையாள டீக்கடைக்காரருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கடைக்காரர் அவர் மீது வெந்நீரை ஊற்றியதாகக் கூறப்படுகிறது. இதில் உடல் வெந்து பலத்த காயமடைந்த அவர் கேரளாவில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 13ம் தேதி சென்னைக்கு அழைத்து வரப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருததுவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சாந்தவேலுவின் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையை வெளிக்கொண்டு வருவதற்காக சென்னை போலீசார் விசாரணைக்காக கேரளா விரைந்துள்ளனர்.
இதற்கிடையே பிரேத பரிசோதனை முடிந்து திருவேற்காட்டில் உள்ள வீட்டுக்கு சாந்தவேலுவின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
நிவாரணம் கேட்டு போராட்டம்:
ஆனால், சாந்தவேலுவின் உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சாந்தவேலுவின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசியல் கட்சியினர் அஞ்சலி:
சாந்தவேலின் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் அன்பு தென்னரசன், ஆவல் கணேசன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
சபரிமலையில் வெந்நீர் ஊற்றப்பட்டதால் பலியான, சாந்தவேலுவின் குடும்பத்தினருக்கு கேரள அரசு ரூ.1 கோடி வழங்க வேண்டும். தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்க வேண்டும். சாந்தவேலின் மனைவி சித்ராவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மகள்கள் தட்சிணா, சஞ்சனா ஆகியோரின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும். சாந்தவேலை சபரிமலைக்கு அழைத்துச் சென்ற சந்திர குருசாமி மலையாளி. அவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications