பொங்கல்-அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு ரூ.3.01 கோடி வருமானம்

பொங்கல் பண்டிகையை யொட்டி சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது வழக்கம். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையின் போது ஏற்படும் நெரிசலை தவிர்க்க அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பாக இந்த ஆண்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
சாதாரண பஸ்கள், ரயில்கள், ஆம்னி பஸ்கள் உள்ளிட்டவைகளின் முன்பதிவு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்தது. தமிழகத்தில் வழக்கமாக இயக்கப்படும் 885 பஸ்களின் அனைத்து சீட்களும் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, 95 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
வழக்கமாக இயக்கப்படும் விரைவு பஸ்களுடன், பொங்கல் சிறப்பு பஸ்களும் சேர்த்து மொத்தம் 980 பஸ்கள் இயக்கப்பட்டன. இதன்மூலம் கடந்த 14ம் தேதி ரூ.1,50,95,000 வருமானம் கிடைத்தது. அதேபோல 15ம் தேதி அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு ரூ. 1.51 கோடி வருமானம் கிடைத்தது. ஜனவரி 14ம் தேதி மற்றும் 15ம் தேதி உள்ளிட்ட 2 நாட்களில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு மொத்தம் ரூ.3,01,95,000 வருவாய் கிடைத்துள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அதிக வருவாய் கிடைக்க பாடுபட்ட பஸ் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக நன்றி தெரிவித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து இயக்கப்படும் வழக்கமான பஸ்களுடன், சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
வழக்கமான நாட்களில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களின் தினசரி வருவாய் ரூ.13,000 ஆகும். ஆனால் பொங்கல் பண்டிகையை யொட்டி பஸ்களின் வருமானம் ரூ.18,000 என்று உயர்ந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாளில் மட்டும், ரூ.3,01,95,000 வருவாய் கிடைத்துள்ளது என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications