தமிழக சிறைகளில் கைதிகளுக்கு பொது தொலைபேசி வசதி செய்ய முடிவு
சென்னை: தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் செல்போன்களின் ஊடுருவலை தவிர்க்கும் வகையில், பொது தொலைபேசி வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றது.
தமிழகத்தில் கடலூர், கோவை, சென்னை, வேலூர், சேலம், பாளையங்கோட்டை உட்பட பல இடங்களில் சிறைகள் உள்ளன. குற்ற செயல்களில் ஈடுபடுவோர் சிறைகளில் அடைக்கப்பட்ட பிறகு வெளியில் உள்ளவர்களுடன் பேச அனுமதி அளிக்கப்படுவதில்லை. அதனால் சிறைச்சாலைகளில் தொலைப்பேசி வசதி கிடையாது.
இதனால் சிறைவாசிகளை பார்க்க வருவோர், கைதிகளுடன் தொடர்பு கொள்ள செல்போன்களை திருட்டு தனமாக கொண்டு வருகின்றனர். சிறைச்சாலை காவலர்களின் சோதனையில் சில நேரங்களில் தப்பிவிடும் செல்போன்கள், கைதிகளின் கைகளில் எட்டிவிடுகின்றது.
இதன்மூலம் கைதிகள் சிறைகளில் இருந்து கொண்டு வெளிநபர்களுடன் எளிதில் தொடர்பு கொள்கின்றனர். இதனை தவிர்க்க சிறைச்சாலைகளில் திடீர் சோதனை, கைதிகளிடம் சோதனை, ரோந்து பணி உள்ளிட்ட பணிகளில் சிறை அதிகாரிகள் நடத்தினர். ஆனால் சிறைகளில் செல்போன்களின் ஊடுருவல் குறைந்தபாடில்லை.
இதனையடுத்து சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் பொது தொலைபேசி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளதை தொடர்ந்து, அடுத்த 2 மாதங்களில் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் பொது தொலைபேசிகள் அமைக்கப்பட உள்ளது.
இதன்படி சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள 2 பிரிவுகளில் 8 பொது தொலைபேசிகளும், பெண்கள் சிறையில் 1 போனும் அமைக்கப்பட உள்ளது. மேலும் வேலூர் சிறையில் 7 போன்களும், கடலூர் சிறையில் 3 போன்களும், திருச்சி மற்றும் கோவை சிறைகளில் 8 போன்களும் அமைக்கப்பட உள்ளது.
மதுரை மற்றும் சேலம் சிறைகளில் தலா 5 போன்களும், பாளையங்கோட்டை சிறையில் 6 போன்களும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி, வேலூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் சிறைகளில் தலா ஒரு போன் அமைக்கப்பட உள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications