வெனிசுலா அதிபர் இன்னும் சில மாதங்களே வாழ்வார்: மருத்துவர்

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சவேஸின்(56) புரோஸ்டிரேட் சுரப்பியில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதயடுத்து அவருக்கு கியூபாவில் அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து தான் நலமாக உள்ளதாகவும், புற்றுநோய் செல்கள் தனது உடலில் இல்லவே இல்லை என்றும் சவேஸ் அறிவித்தார்.
இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல் வரை சவேஸ் உயிருடன் இருந்தால் அது அவர் செய்த பாக்கியம் என்று அவருக்கு நெருக்கமான மருத்துவர்கள் கூறியதாக தி டெய்லி மெயில் செய்தி வெளியிட்டடுள்ளது.
சவேஸின் பெருங்குடலின் ஒரு பாகம் மற்றும் புரோஸ்டிரேட் சுரப்பியை பாதித்த புற்றுநோய் தற்போது அவரது எழும்பு உள்பட உடலின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியுள்ளது என்று அவரது மருத்துவர்கள் தெரிவித்ததாக பிரேசில் நாட்டு பத்திரிக்கை வேஜா செய்தி வெளியிட்டுள்ளது.
கீமோதெரபி, ரேடியோதெரபி மற்றும் அறுவை சிகிச்சையால் பலனில்லை என்று மருத்துவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதமே சவேஸிடம் தெரிவித்துள்ளனர். மேலும் அவரை உடனடியாக ஐரோப்பாவில் உள்ள புற்றுநோய் மையத்தில் சேருமாறும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் புற்றுநோய் மையத்தில் சேர மறுத்துவிட்டார் என்று அந்த பத்திரிக்கை மேலும் தெரிவி்த்துள்ளது.
சவேஸ் பொது இடங்களில் கம்பீரமாக காட்சியளிக்கலாம். ஆனால் அவர் இன்னும் சில மாதமங்கள் தான் வாழ்வார் என்று மருத்துவர்கள் தெரிவி்த்துள்ளனர். தனது அதிபர் பணியில் குறிக்கிடும் எந்தவித சிகிச்சையையும் தான் எடுத்துக்கொள்ளப்போவதில்லை என்று சவேஸ் தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications