பாகிஸ்தானில் பத்திரிக்கையாளரை சுட்டுக் கொன்ற தாலிபான்கள்
இஸ்லாமாபாத்: வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள மசூதியில் தொழுது கொண்டிருந்த வாய்ஸ் ஆப் அமெரிக்கா பத்திரிக்கையாளர் முகர்ரம் கான் ஆதிப் தாலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானின் கைபர்-படுங்க்வா மாகாண தலைநகரான பெஷாவரில் இருந்து 35 கிமீ தூரத்தில் உள்ள ஷப்காதர் நகரைச் சேர்ந்தவர் முகர்ரம் கான் ஆதிப்(35). வாய்ஸ் ஆப் அமெரிக்கா பத்திரிக்கையில் பணிபுரிந்தார். நேற்று மாலை தனது வீட்டுக்கு அருகே உள்ள மசூதியில் தொழுகச் சென்றார். அங்கு அவர் தொழுது கொண்டிருக்கையில் திடீர் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக் இ தாலிபான் தீவிரவாதிகள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் மசூதிக்கு வந்தனர்.
அவர்களில் ஒருவன் மசூதிக்குள் நுழைந்து முகர்ரம் கானை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த தாக்குதலில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவரும் காயமடைந்தார்.
வாய்ஸ் ஆப் அமெரிக்கா தவிர ஆதிப் துனியா என்னும் நியூஸ் சேனலிலும் பண்புரிந்து வந்தார். அவருக்கு எற்கனவே தாலிபான் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications