சுரேஷன் ராஜன் தொழிற்சாலையில் 'ரெய்டு'-2வது நாளாக இன்றும் தொடர்கிறது!
நாகர்கோவில்: முன்னாள் திமுக அமைச்சர் சுரேஷன் ராஜனுக்குச் சொந்தமான தொழிற்சாலையில் இன்று 2வது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
திமுக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் சுரேஷ் ராஜன். சுற்றுலாத்துறை உள்ளிட்ட அமைச்சர் பொறுப்பை வகித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட திமுக செயலாளராகவும் இவர் இருக்கிறார்.
நெல்லை மாவட்டம் பழவூர் கிராமத்தில் இவருக்குச் சொந்தமாக ஒரு இரும்புத் தொழிற்சாலை உள்ளது. நேற்று இங்கு நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் திடீரென ஆய்வில் ஈடுபட்டனர்.
அந்த தொழிற்சாலையின் கட்டிடங்களை அங்குலம் அங்குலமாக அளவெடுத்து அவற்றை கட்டுவதற்கு ஆகும் செலவை மதிப்பீடாக தயாரித்தனர். அதேபோல் கட்டிடத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ள இரும்பு, மரங்கள், தொழிற்சாலையில் உள்ள எந்திரங்கள், மேஜை, நாற்காலிகள் மற்றும் தளவாட பொருட்கள் போன்றவற்றுக்கும் மதிப்பீடு தயாரித்தனர். மேலும் தொழிற்சாலையின் எல்லைகளையும் அளந்து சரிபார்த்தனர்.
இன்றும் இந்தப் பணி தொடர்கிறது. ஆலையில் உள்ள உபகரணங்களின் மதிப்பு உள்ளிட்டவற்றை அவர்கள் கேட்டு தகவல் சேகரித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications