வயது பிரச்சனை: ராணுவ தளபதி வி.கே.சிங்குக்கு ஆதரவான பொது நல வழக்கு-சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

ராணுவ தலைமைத் தளபதி வி.கே.சிங்கின் பிறந்த நாள் விஷயத்தில் மத்திய அரசுக்கும் அவருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.
மெட்ரிகுலேஷன் சான்றிதழில், அவரது பிறந்த தேதி 1951ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ராணுவப் பணிக்காக அவர் மத்திய பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி நடத்திய ராணுவ அகாடமி தேர்வு எழுதியபோது வி.கே.சிங்கின் பிறந்த தேதி மே 10, 1950ம் ஆண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேதியின்படி கணக்கிட்டால் வருகிற மே 31ம் தேதி அன்று வி.கே.சிங் ஓய்வு பெற வேண்டும்.
ஆனால், அவர் தனது பிறந்த தேதி 1951ம் ஆண்டு தான் என்று கூறி இதன்படி ஓய்வு பெற மறுத்து வருகிறார். அவரை மத்திய ஓய்வு பெறச் சொல்வதால், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந் நிலையில், அவருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. கிரேனேடியர்ஸ் அசோசியேஷன் என்ற அமைப்பு இந்த மனுவைத் தாக்கல் செய்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விஷயத்தில் வழக்கில் தொடர்பில்லாதவர்களின் மனுவை ஏற்க முடியாது என்று கூறி, அதை தள்ளுபடி செய்துவிட்டது.
முன்னதாக நேற்று இந்த விவகாரம் குறித்து பாதுகாப்புத்துறை இணையமைச்சர் பல்லம் ராஜூவை வி.கே.சந்தித்துப் பேசினார். அப்போது, இந்த விவகாரத்தில் மத்திய அரசை நீதிமன்றத்துக்கு இழுத்தது சரியல்ல என்று சிங்கிடம் ராஜூ கூறியதாகத் தெரிகிறது.
வரும் மே மாதம் 31ம் தேதி சிங் பதவி விலகினால், கிழக்கு மண்டல தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் பிக்ரம் சிங் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார். வி.கே.சிங் இப்போது விலகாமல் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பதவி விலகினால், அதற்குள் பிக்ரம் சிங்கும் ஓய்வு பெற்றுவிடுவார். அப்போது கிழக்கு மண்டல ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கே.டி. பர்நாயக் தான் ராணுவத்தின் தலைமை தளபதியாக முடியும்.
மே 31ம் தேதிக்கு முன்னதாக வி.கே.சிங் நீக்கப்பட்டாலோ அல்லது பதவி விலகினாலோ, மேற்கு மண்டல ராணுவ தளபதி சங்கர் கோஷுக்கு அந்தப் பதவி கிடைக்கும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications