கோத்ராவில் நரேந்திர மோடி உண்ணாவிரதம்!
அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று கோத்ரா நகரில் உண்ணாவிரதம் இருந்தார்.
நல்லிணக்கத்தை வலியுறுத்தி நரேந்திர மோடி மாநிலம் முழுவதும் பல கட்டங்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக இன்று குஜராத் மாநிலம் கோத்ரா நகரில் உண்ணாவிரதம் இருந்தார். அவருடன் பல்லாயிரக்கணக்கானவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதையடுத்து கோத்ரா நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உண்ணாவிரத மேடை பகுதியில் 1,600 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். முக்கிய இடங்களில் அதிரடிப்படை வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந்த உண்ணாவிரதத்தை எதிர்த்து போராட்டம் நடத்த முயன்ற 6 பேரை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.
இந்த உண்ணாவிரதத்துக்கு எதிராக முன்னாள் குஜராத் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சங்கர்சிங் வகேலா, நாளை கோத்ராவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். மோடி உண்ணாவிரதம் நடத்தும் இடத்தில் எல்லாம் இவரும் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கோத்ராவில் ரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து நடந்த மாபெரும் மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான சிறுபான்மையினர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் எரிப்பில் 59 கர சேவகர்கள் பலியானதும் குறிப்பிடத்தக்கது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications