ருஷ்டியின்றி துவங்கிய ஜெயப்பூர் இலக்கிய விழா

பிரபல பிரிட்டிஷ் இந்திய எழுத்தாளரான சல்மான ருஷ்டி இன்று (20ம் தேதி) முதல் 24ம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவில் கலந்து கொள்கிறார் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காத ருஷ்டியின் விசாவை ரத்து செய்யுமாறு இஸ்லாமிய மத அமைப்பான தாரூல் உலூம் தியோபான்ட் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் கடிதம் அனுப்பியது.
மேலும் ருஷ்டி ஜெய்ப்பூர் வருவதை ராஜஸ்தான் மாநில மக்களும் விரும்பவில்லை என்று அம்மாநில முதல்வர் கெஹ்லாட் தெரிவித்தார். இதையடுத்து ருஷ்டி சத்தமில்லாமல் வந்து இலக்கிய விழாவில் கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று ஜெயப்பூரில் இலக்கிய விழா துவங்கியது. ஆனால் ருஷ்டி வரவில்லை. தான் வராததற்கான காரணத்தை அறிக்கையாக அனுப்பி வைத்திருந்தார். அது துவக்க விழாவில் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.
இதற்கிடையே ருஷ்டி டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
ஜெயப்பூருக்கு வர முடியாதது மிகவும் வருத்தமாக உள்ளது. மும்பை மாபியா டான் 2 அடியாட்களிடம் ஆயுதங்கள் கொடுத்து நான் இந்தியா வந்தால் என்னைக் கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளாராம். அதனால் நான் விழாவுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications