ராம்தேவ் 'கோட்டை'யிலிருந்து உ.பி. தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறது அன்னா குழு!

பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார் அன்னா. அதற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் பின்னர் அக்குழுவினரில் பலர் குழப்பமான நிலைப்பாடுகளை எடுத்ததாலும், அவர்கள் மீது சரமாரியாக பல்வேறு புகார்கள் எழுந்ததாலும் அன்னா குழுவின் போராட்டங்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைய ஆரம்பித்தது.
மும்பையில் அன்னா ஹஸாரே தொடங்கிய உண்ணாவிரதத்துக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இல்லை. உடல்நிலை சரியில்லாததால் உண்ணாவிரதத்தை பாதியில் நிறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்ய மாட்டோம் என அன்னா குழு அறிவித்தது.
இந்நிலையில், இந்த முடிவை அன்னா குழு நேற்று திடீரென கைவிட்டது. தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் ஊழலுக்கு எதிராக பிரசாரம் செய்யப்படும் என அன்னா குழு அறிவித்தது. ஹரித்வாரில் நாளை பிரசாரம் தொடங்கப்படுகிறது. அன்னா குழு உறுப்பினர்கள் அரவிந்த் கேஜ்ரிவால், கிரண்பேடி உட்பட பலர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். ஆனால் அன்னா வர மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அன்னா குழு கூறுகையில், 5 மாநிலங்களில் அன்னா குழு பிரசாரம் செய்யும். நாங்கள் எந்த கட்சிக்கும் எதிராக பிரசாரம் செய்ய மாட்டோம். வாக்காளர்களிடம் ஊழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, நேர்மையானவர்களை தேர்ந்ததெடுக்கும்படி கூறுவோம். வாக்காளர்களை வழி நடத்த இதுதான் சரியான நேரம் என்றனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications