எழிலகம் தீ விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஜெ. ஆறுதல்
சென்னை: எழிலகம் கட்டடத்தில் நடந்த தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தீயணைப்பு அதிகாரிகளை முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமையன்று அதிகாலை சென்னை சேப்பாக்கம் எழிலக கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க முயன்ற தீயணைப்புப் படை வீரர் ஒருவர் பலியானார். மேலும் மூவர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.
படுகாயமடைந்த மத்திய கோட்ட தீயணைப்பு அதிகாரி பிரியா ரவிச்சந்திரன், நிலைய தீயணைப்பு அதிகாரி முருகன் ஆகியோர் நுங்கம்பாக்கம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை முதலமைச்சர் ஜெயலலிதா வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது பிரியா ரவிச்சந்திரனுக்கு 45 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர் உடல் நிலை தேறி வருகிறதுஇருப்பினும், அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது, ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து அவர் உடல் நலம் குணமடைய மூன்று மாதங்கள் ஆகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இருவருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று அவர்களின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications