புரட்சிகளும், எதிர் புரட்சிகளும்...1975 முதல் தத்தளித்து வரும் வங்கதேசம்!
டாக்கா: வங்கதேசத்தையும், ராணுவப் புரட்சிகளையும் பிரித்துப் பார்க்க முடியாது. 1975ம் ஆண்டு நடந்த முதல் ராணுவப் புரட்சியில் அந்த நாடு தனது தலைவரான முஜிபுர் ரஹ்மானைப் பறி கொடுத்தது. அன்று முதல் அடிக்கடி புரட்சிகளை சந்தித்து வந்துள்ளது வங்கதேசம்.
வங்கதேசத்தில் இதுவரை 2 முறை ரத்தக் களறியுடன் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 19 முறை புரட்சி முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன. 2 அதிபர்கள் புரட்சியின்போது கொல்லப்பட்டுள்ளனர்.
ஹசீனாவின் தந்தையான ஷேக் முஜிபுர் ரஹ்மான், 1975ல் நடந்த முதல் ராணுவப் புரட்சியின்போது படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல 1981ம் ஆண்டு ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சிக்கு வந்தவரான ஜியாவுர் ரஹ்மானும் இன்னொரு ராணுவப் புரட்சியின் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
1975ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வங்கதேசம் தனது முதல் ராணுவப் புரட்சியை சந்தித்தது. ரத்தக்களறியான இந்தப் புரட்சிக்குக் காரணம் ராணுவ அதிகாரிகளான மேஜர் எஸ்.எப். ரஹ்மான் மற்றும் ரஷீத் ஆகியோர் ஆவர். அப்போது ஆட்சியில் இருந்த அதிபர் முஜிபுர் ரஹ்மானை புரட்சி மூலம் கவிழ்த்த அவர்கள், ரஹ்மானை குடும்பத்தோடு கொடூரமாகக் கொலை செய்தனர். அப்போது வெளிநாட்டுக்குப் போயிருந்ததால் ரஹ்மானின் மகள்களான ஷேக் ஹசீனா மற்றும் ஷேக் ரஹேனா ஆகியோர் மட்டும் உயிர் பிழைத்தனர். குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர்.
1975ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி மீண்டு் ஒரு புதுப் புரட்சி வெடித்தது. ரஹ்மான், ரஷீத் ஆகியோர் அமைத்த அரசை, பிரிகேடியர் கலீத் மொஷாரப் தலைமையிலான ராணுவத்தினர் கவிழ்த்தனர். ராணுவத் தளபதியாக இருந்த ஜியாவுர் ரஹ்மான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
ஆனால் இந்தப் புரட்சியும் நீண்ட நாள் நீடிக்கவில்லை. அதே ஆண்டு நவம்பர் 7ம் தேதி படை வீரர்கள் திரண்டு வந்து ஜியாவுர் ரஹ்மானை விடுவித்தனர். மொஷாரப்பை படுகொலை செய்தனர். அவரது கூட்டாளிகளும் கொல்லப்பட்டனர்.
மொஷாரப் இந்தியாவுக்கு சாதகமானவர், இந்தியாவுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று பரவிய தகவலே மொஷாரப்புக்கு எதிராக ராணுவத்தினர் புரட்சி நடத்தக் காரணம்.
பின்னர் ஜியாவுர் ரஹ்மான் தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. ஆனால் இவரது ஆட்சிக்காலத்தில் 21 முறை புரட்சிகள் வெடித்தன. ஆனால் அத்தனையும் முறியடிக்கப்பட்டன. பாகிஸ்தானுக்கு ஆதரவானவர் ஜியாவுர் ரஹ்மான். இவருக்கு எதிராக பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வங்கதேசம் உருவாகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களே பெருமளவில் போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
1981ம் ஆண்டு மே 30ம் தேதி ஜியாவுர் ரஹ்மான் சிட்டகாங்கில் ராணுவ வீரர்கள் நடத்திய கலகத்தின்போது கொல்லப்பட்டார். இதையடுத்து ராணுவத் தளபதியாக இருந்து வந்த ஜெனரல் எர்ஷாத் கலகத்தில் ஈடுபட்ட ராணுவத்தினரை அடக்கினார். மேலும் கலகத்தில் ஈடுபட்ட ராணுவ மேஜர் ஜெனரல் அபுல் மன்ஸூமை கொலை செய்தார். ஆட்சியையும் கைப்பற்றினார். பின்னர் தன்னை நாட்டின் சர்வாதிகாரியாக அறிவித்தார்.
1996ம் ஆண்டு பிரதமராக இருந்த கலீதா ஜியாவின் உத்தரவை ஏற்க மறுத்து ராணுவத் தளபதி அபு சலே முகம்மது நசீம் புரட்சி செய்ய முயன்றார். ஆனால் அவர் கைது செய்யப்பட்டு புரட்சி முறியடிக்கப்பட்டது.
இதேபோல தற்போதைய பிரதமர் ஹசீனாவும் கூட பலமுறை குறி வைக்கப்பட்டுள்ளார். 1975ல் நடந்த புரட்சியின்போது சகோதரியுடன் சேர்ந்து உயிர் தப்பிய அவர் பின்னர் எதிர்க்கட்சித் தலைவியாக இருந்தபோது 2004ம் ஆண்டு கிரனேட் தாக்குதலுக்கு உள்ளானார். அப்போது அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கலீதா ஜியாவின் மகன்தான் இந்த தாக்குதலுக்குக் காரணம் என்று அப்போது கூறப்பட்டது.
அதேபோல 2009ல் அவர் பிரதமர் பதவியை ஏற்ற 2 மாதத்தில் பங்களாதேஷ் ரைபிள் படையினர் பெரும் கலகத்தில் குதித்தனர். இதை அடக்க முயன்ற ராணுவ வீரர்கள் பலர் கொன்று குவிக்கப்பட்டனர். பெரும் சிரமத்திற்குப் பின்னர் கலகத்தை அடக்கியது ராணுவம்.
இந்த நிலையில் தற்போது பெரும் புரட்சி அபாயத்திலிருந்து தப்பியுள்ளது ஹசீனாவின் ஆட்சி.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications