ஆஸ்திரேலியாவில் மகாத்மா காந்தியின் வெண்கலை சிலை திறப்பு
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நாட்டு தந்தை மகாத்மா காந்தியின் வெண்கல திருஉருவ சிலையை தெற்கு ஆஸ்திரேலிய மாகாண முதல்வர் ஜாய் வெல்த்திரில் திறந்து வைத்தார்.
மகாத்மா காந்தி போதித்து வந்த அகிம்சை கொள்கைக்கு உலகம் முழுவதும் பெரும் மதிப்பும், மரியாதையும் உள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் உள்ள அடிலெய்ட் பல்கலைக் கழகத்தில் 1.95 மீட்டர் உயரம் கொண்ட வெண்கலத்திலான சிலை வடிவமைக்கப்பட்டது.
தெற்கு ஆஸ்திரேலிய முதல்வர் ஜாய் வெல்த்திரில் காந்தி சிலையை திறந்து வைத்தார். சிலையில் தத்துவ வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது. காந்தி சிலை திறப்பு விழாவில் பல்கலைக் கழக வேந்தர், துணை வேந்தர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்து ஜாய் வெத்ரில் கூறியதாவது,
மகாத்மா காந்தியின் இந்த வெண்கலை சிலையானது இந்தியாவுக்கும் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்து வரும் நட்பை உறுதிபடுத்தும் வகையில் உள்ளது. ஒரு மாபெரும் ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றது. ஆராய்ச்சி மற்றும் கல்வியில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்துடன் மட்டுமல்லாது ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றது என்றார்.
இந்திய அரசு இந்த சிலையை ஆஸ்திரேலியாவுக்கு பரிசாக கொடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications