சோதனை என்ற பெயரில் அவமதிப்பு: கூடங்குளம் அணுமின்நிலைய விஞ்ஞானிகள் போராட முடிவு
நெல்லை: சோதனை என்ற பெயரில் வருவாய் துறையினர் தங்களை அவமதிப்பாக கூறி கூடங்குளம் அணுமின்நிலைய விஞ்ஞானிகள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இந்திய அணுமின் கழக விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளின் ஆண்டு செயல்பாடுகளை மதிப்பீடும் கருத்தரங்கம் வீடியோ கான்பிரான்ஸ் மூலம் வியாழக்கிழமை இந்தியா முழுவதும் நடைபெற்றது. இதில் பங்கேற்க கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு அணு விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் 17 பேர் வந்தனர். அவர்களின் வாகனத்தை அணு உலை எதிர்ப்பாளர்கள் முற்றுக்கையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுக்கவில்லை.
இதையடுத்து விஞ்ஞானிகள் நெல்லை எஸ்பி, மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டனர். அவர்களும் சாதகமான பதிலை தெரிவிக்காததால் விஞ்ஞானிகள் விரக்தியடைந்தனர். பின்னர் மாவட்ட நிர்வாகத்திடம் போராடிய பின்னரே அணுமின்நிலையத்தினுள் செல்ல முடிந்தது.
அவமதிப்பு
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது, இந்திய முழுவதும் உள்ள அணு விஞ்ஞானிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர பயிற்சி தேர்வு நடைபெறும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அணு விஞ்ஞானிகளை தேர்ந்தெடுத்து அவர்களின் செயல்பாடுகளை மதிப்பீட்டு வீடியோ கான்பிரான்ஸ் மூலம் தேர்வு நடைபெறும். சிறப்பாக பதில் அளிப்பவர்களுக்கு பதிவு உயர்வு வழங்கப்படும். வீடியோ கான்பிரான்ஸ் வசதி நாங்கள் தங்கியிருக்கும் குடியிருப்பில் இல்லாததால் அணு மின் நிலையத்துக்கு வந்தோம். ஆனால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பொதுவாக விஞ்ஞானிகளை எந்த நாடும் கவுரமாக மதிக்கும். ஆனால் எங்களை சாதாரண விஏஓ, ஆர்ஐக்கள் பேட்ஜை பார்க்கிறோம் என்ற சாக்கில் சட்டையை பிடித்து இழுத்து சோதிக்கின்றனர். இச்செயல் எங்களை புண்படுத்துக்கிறது. சுருக்கமாக சொன்னால் வருவாய்துறையினர் எங்களை கேவலமாக நடத்துக்கின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஓத்துழைப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இதுகுறித்து அணு மின் விஞ்ஞானிகள் சங்க கூட்டத்தில் ஆலோசித்தோம். விரைவில் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications