கேரளாவில் தமிழர் மீது வெந்நீர் ஊற்றிக் கொன்றவர்களைக் கைது செய்யாதது ஏன்?- வைகோ

சேலம் வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் சாந்தவேலு கேரளாவில் அங்குள்ள டீக்கடைக்காரர்களால் வெந்நீர் ஊற்றப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச் செயலில்ஈடுபட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. ஏன் அவர்களைக் கைது செய்யவில்லை கேரளா.
குற்றம் இழைத்து கொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யுமாறு கேரளாவுக்கு தமிழக அரசு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும. பலியான சாந்தவேலு குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரண உதவிகளைச் செய்ய வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே கேரளாவுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த செயல் தேசிய ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றைப் பாதிக்கும்.
தானே புயலால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம் போதாது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலத்தை சீர் செய்ய விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000 உதவித் தொகை வழங்க வேண்டும் என்றார் அவர்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications