டேராடூனில் ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு: ஒருவர் கைது

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இன்று உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ராகுல் மீது ஷூ வீசினார். ஷூ வீசியவரை போலீசார் கைது செய்தனர். உத்தரகண்டில் வரும் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இது குறித்து ராகுல் கூறுகையில், என் மீது ஷூ வீசினால் நான் பயந்து ஓடிவிடுவேன் என்று யாராவது நினைத்தால் அது தவறு. இதற்கெல்லாம் நாம் அசந்துவிட மாட்டேன் என்றார்.
சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் உத்தர பிரதேச மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் துத்தியில் கடந்த 21ம் தேதி நடந்த பேரணியில் ராகுல் கலந்து கொண்டார். அப்போது 2 இளைஞர்கள் ராகுலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கருப்புக் கொடி காட்டினர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த 2 பேரையும் நையப் புடைத்தனர். அதில் அஜய் குமார் சிங் என்ற யோகா குரு பாபா ராம்தேவின் ஆதரவாளரை போலீசார் கைது செய்தனர்.
கருப்புக் கொடி காட்டப்பட்டதற்கு 2 நாட்களுக்கு முன்பு தான் பந்தாவில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல் தனது பேச்சை பாதியிலேயே முடித்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருமாறு கூறி பேனர்கள் மற்றும் போஸ்டர்களை காண்பித்தது தான் பேச்சு பாதியில் முடிக்கப்பட்டதன் காரணம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications