சசிகலா கணவர் நடராஜனின் மச்சான் மகன் மீது கோவையில் நில மோசடி, கொலை மிரட்டல் புகார்
கோவை சசிகலாவின் கணவர் நடராஜனின் மச்சான் மகன் சரவணன் என்பவரும், அவருடன் மேலும் 2 பேரும் தனது நிலத்தை அபகரித்து விட்டதாகவும், அதைத் தட்டிக் கேட்டபோது மூன்று பேரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கோவை மாவட்ட பாஜக துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார்.
சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக ஆங்காங்கே வழக்குகள், பாயத் தொடங்கியுள்ளன. முதலில் சிக்கியவர் சசிகலாவின் தம்பி திவாகரன். நில மோசடி, கொலை மிரட்டல் தொடர்பாக சிக்கியுள்ள அவர் போலீஸ் பிடியிலிருந்து தப்ப தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில், சசிகலாவின் இன்னொரு உறவினர் மீது நில மோசடிப் புகார் எழுந்துள்ளது. சசிகலாவின் கணவர் நடராஜனின் மச்சானுடைய மகன் சரவணன். இவர் மீதும் மேலும் இருவர் மீதும் கோவை மாவட்ட பாஜக துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் என்பவர் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரில் எனக்கு பி.என்.பாளையத்தில் ரூ. 2கோடி மதிப்புள்ள நிலம் இருந்தது. இந்த நிலத்தை சரவணன் என்பவர் அபகரித்து விட்டார். இவர் சசிகலாவின் கணவர் நடராஜனின் மைத்துனர் மகன் ஆவார். இதை நான் தட்டிக் கேட்டபோது சரவணனும், மேலும் 2 பேரும் சேர்ந்து என்னை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்களிடமிருந்து என்னைப் பாதுகாப்பதோடு எனது நிலத்தையும் மீட்டுத் தர உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார் ராதாகிருஷ்ணன்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி நடந்தால் நடராஜனின் மச்சான் மகன் சரவணனும் தலைமறைவார் என்று தெரிகிறது.
ஏற்கனவே நடராஜனின் மச்சான் திவாகரன் மீது வழக்குப் பாய்ந்து அவர் தலைமறைவாகியுள்ள நிலையில் இன்னொரு மச்சானின் மகன் மீது புகார் பாய்ந்திருப்பது சசிகலா தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications