சேலம் அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள 121 ஈயக்கட்டிகள் பறிமுதல்: 2 பேர் கைது
சேலம்: சேலம் அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள 121 ஈயக்கட்டிகளை லாரியில் கடத்திய போது அதனை மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் மடக்கிப் பிடித்தார்.
சேலம் சீரகாபாடி தேசிய நெடுஞ்சாலை அருகே சேலம் நோக்கி லாரி ஒன்று அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் அந்த வழியாக காரில் வந்த மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் லாரியின் வேகத்தால் சந்தேகமடைந்து அதை மடக்கி நிறுத்தி, சோதனை நடத்தினார். அப்போது அதில் 30 அவல் மூட்டைகள் இருந்தது. இதனால் மேலும் சந்தேகமடைந்த அவர் லாரி முழுவதும் சோதனையிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் அந்த லாரியை முழுமையாக சோதனையிட்டதில் அவல் மூட்டைக்கு கீழே 121 ஈயக்கட்டிகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து லாரி டிரைவர் மனோகரன், கிளீனர் ரங்கநாதன் ஆகியோரைப் பிடித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அனுமதியின்றி 121 ஈயக்கட்டிகளை சேலம், செவ்வாய்ப்பேட்டைக்கு கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த ஈயக்கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications