கலைஞர் அறிவாலய திறப்பை முடக்க சாமிநாதன் கைது-திமுக புகார்
திருப்பூர்: திருப்பூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயத் திறப்பு விழாவை முடக்கும் வகையிலேயே முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கைது செய்யப்பட்டுள்ளதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்துள்ள முத்தூரில் உள்ள சாமிநாதன் வீட்டுக்கு இன்று அதிகாலை சென்ற போலீஸார் அவரை நில அபகரிப்பு வழக்கில் கைது செய்தனர். இதனால் திருப்பூர் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது அரசியல் ரீதியான பழிவாங்கல் நடவடிக்கை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ள்ளனர்.
ஆனால், கோவை கொடிசியா அரங்கம் அருகே கோபிநாத் என்பவருக்கு சொந்தமான இடத்தை அபகரித்ததாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், சாமிநாதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதை திருப்பூர் திமுகவினர் மறுக்கின்றனர். திருப்பூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தை, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரும் 29ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியை முடக்கவும், குழப்பம் விளைவிக்கும் நோக்கிலேயே சாமிநாதனை போலீஸார் கைது செய்துள்ளனர் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications