சாலைகளில் அதி வேகத்தில் வண்டி ஓட்டினால் ரூ.1000 அபராதம்: தமிழக அரசு
சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராதத்தை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி அபாயகரமாக வண்டி ஓட்டுபவர்களிடம் இருந்து இரண்டாயிரம் ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி இரு சக்கர வாகனப் பதிவைப் புதுப்பிக்கத் தவறினால், முதன்முறை பிடிபடும் போது 100 ரூபாயும் அதற்கு அடுத்த ஒவ்வொரு முறையும் 300 ரூபாயும் வசூலிக்கப்படும்.
பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டினால் முதல் முறை 2 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்படும். இரு சக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்தால் 100 ரூபாயும், இரண்டாம் முறை அதே தவறுக்கு 300 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். அபாயகரமாக வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாயும், மீண்டும் அதே தவறு செய்தால் 2 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டினால் 400 ரூபாயும், அடுத்தடுத்த தவறுகளுக்கு 1000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும்.
ஹெல்மெட் அவசியம்
ஹெல்மெட் இன்றி வாகனம் ஓட்டி முதன்முறை பிடிபட்டால் 100 ரூபாயும் அடுத்தடுத்த முறைகளில் 300 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும். ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை காட்டத் தவறினால் 100 ரூபாயும், அடுத்தடுத்த முறைகளுக்கு 300 ரூபாயும் விதிக்கப்படும்.
இந்த புதிய உத்தரவு, சென்னை மாநகரில் வரும் 30ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications