குடியரசு தினம்- நெல்லை- தூத்துக்குடியில் 7,000 போலீசார் பாதுகாப்பு
நெல்லை: குடியரசு தினத்தையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குடியரசு தினத்தன்று ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத் துறை அனைத்து மாநிலங்களையும் எச்சரித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நெல்லை மாநகர கமிஷனர் கருணாசாகர், சரக டிஐஜி வரதராஜூ ஆகியோர் உத்தரவின் பேரில் எஸ்பிக்கள் விஜயேந்திர பிதாரி, தூத்துக்குடி ராஜேந்திரன், மாநகர துணை கமிஷனர் ஜெயபால் ஆகியோர் தலைமையில் மொத்தம் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நெல்லை மாநகரில் 1,500 போலீசாரும், நெலலை மாவட்டத்தில் 3,000 போலீசாரும், தூத்துக்குடியில் 2,000 போலீசாரும், மணிமுத்தாறு பட்டாலியனைச் சேர்ந்த 500 போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கமாண்டோ மற்றும் விரைவு அதிரடிப்படையினரும் களம் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் புளியரை, கங்கைகொண்டான், காவல் கிணறு, பாளை கேடிசி நகர் மற்றும் மாநகரத்தி்ல் தாழையூத்து, மேலப்பாளையம், கருங்குளம், பாளை டக்கரம்மாள்புரம் சோதனைச்சாவடியில் போலீசார் வாகனங்களை 24 மணி நேரமும் சோதனையிட்டு வருகின்றனர். வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள், ஆற்றுப்பாலங்கள், ரயில்வே பாலங்கள், மார்கெட், பஸ் நிலைய பகுதிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தடை செய்யப்பட்ட அமைப்பினர், சந்தேகத்திற்கிடமான நபர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications