மார்ச்சில் பட்ஜெட் - பிரணாப் முகர்ஜி
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் இன்று (ஜனவரி 25) செய்தியாளர்களைச் சந்தித்த பிரணாப் முகர்ஜியிடம் பட்ஜெட் குறித்து கேட்டபோது, "பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் தேதி குறித்து முடிவெடுக்கப்படும்," என்றார்.
மார்ச் 9ம் தேதிக்குப் பிறகுதான் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை மீதான குடியரசுத் தலைவரின் உரை நடைபெறும். ஏனென்றால், அன்று தான் தேர்தல் நடைமுறைகள் நிறைவடைகின்றன என்றும் அவர் கூறினார்.
வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருப்போர் பெயர் வெளியிடுவது குறித்து கேட்டதற்கு, அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரணாப் முகர்ஜி கூறினார்.












Click it and Unblock the Notifications