பண்ருட்டியில் அதிமுகவில் ஐக்கியமான தேமுதிக கவுன்சிலர்கள்
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகர்மன்ற தேமுதிக கவுன்சிலர்கள் 2 பேர் அமைச்சர் எம்.சி. சம்பத் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகர் மன்றத்தில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இதில் 24 வார்டுகளை அதிமுக கைப்பற்றியுள்ளது. தேமுதிக சார்பில் 4வது வார்டில் முகமது கனி என்பவரும், 6வது வார்டில் வச்சலா செல்வமணி என்பவரும் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் தேமுதிகவைச் சேர்ந்த இந்த 2 கவுன்சிலர்களும் அமைச்சர் எம்.சி. சம்பத் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இவர்களையும் சேர்த்து பண்ருட்டி நகர் மன்றத்தில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சில கவுன்சிலர்களுக்கு அதிமுக வலை விரித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications