ராமதாஸ் மீதான வழக்கு... நகைப்பை ஏற்படுத்துகிறது.-ஜி.கே.மணி
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூர் காவல் நிலையத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 3 பேர் மீது, வன்னியர் கல்வி அறக்கட்டளை கல்லூரியில் பணியாற்றும் மாயகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
உள்ளூர் அமைச்சர், போலீசாரை மிரட்டியதை அடுத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. டாக்டர் ராமதாஸ் கடந்த 5 நாட்களாக சென்னையில் தொடங்கி வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், யாரென்றே தெரியாத ஒருவரை தாக்கும்படி அவர் தூண்டியதாக புகார்தாரர் கூறியிருப்பதும், அதை வேதவாக்காக கருதி போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதும் விசித்திரமாகவும், நகைப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
எனவே டாக்டர் ராமதாஸ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை போலீசார் ரத்து செய்ய வேண்டும். பொய்யான புகாரை அளித்தவர் மீதும் அவரை தூண்டி விட்டவர்கள் மீதும் உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மணி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications