ராமேஸ்வரம், திருக்கடையூர் கோவில் பக்தர்களுக்கு ஓய்வு இல்லம்: ஜெ. உத்தரவு
சென்னை: மணல்மாதா திருத்தலம், ராமநாதசுவாமி திருக்கோவில் மற்றும் அருள்மிகு அபிராமி அம்மன்-அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், தனுஷ்கோடி ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி பல்வேறு வசதிகள் செய்து கொடுக்க முதல்வர் ஜெயலலிதா ரூ. 3.45 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாட்டின் ஒருமைப்பாட்டினை வளர்ப்பதிலும், மாணவ, மாணவியரிடையே சிந்தனை கிளர்ச்சியை ஏற்படுத்துவதிலும், அறிவுப் புரட்சியை தோற்றுவிப்பதிலும், அரசுக்கு வருமானத்தை ஈட்டித் தருவதிலும், சுற்றுலா முக்கிய பங்காற்றுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
தொடர்ந்து அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில், சொக்கன் குடியிருப்பில் உள்ள மணல்மாதா திருத்தலத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் நலனுக்காக, இத்திருத்தலப் பகுதியில் பயணிகளின் வாகனம் பாதுகாப்பாக நிறுத்துவதற்கான நிறுத்துமிடம் அமைப்பதற்காக 15 லட்சம் ரூபாயும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குளியலறை மற்றும் கழிப்பறை கட்டுவதற்காக 4 லட்சம் ரூபாயும், காத்திருப்போர் கூடம் அமைப்பதற்காக 5 லட்சம் ரூபாயும், குடிநீர் வசதி செய்து தருவதற்காக 1 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதே போன்று இந்தியாவின் முக்கிய ஆன்மீக மற்றும் சுற்றுலாத் தலமாக விளங்கும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கும், தனுஷ்கோடிக்கும் ஏராளமான பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகை புரிவதைக் கருத்தில் கொண்டு இங்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ராமேஸ்வரத்திலுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக வளாகத்தில் 2 கோடி ரூபாய் செலவில் ஒரு சுற்றுலா ஓய்வு இல்லம் கட்டுவதற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில் உள்ள பிரசித்திப்பெற்ற அருள்மிகு அபிராமி அம்மன்-அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலுக்கு, 60 வயது நிறைவு மற்றும் 80 வயது நிறைவினை ஒட்டி பல்வேறு பக்தர்கள் தங்கள் உறவினர்களுடன், பூஜைகள் செய்வதற்காக அதிக அளவில் வருகை தருவதால் அவர்களின் வசதிக்காக சுற்றுலா ஒய்வு இல்லம் கட்டுவதற்காக 1 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைப்பதுடன், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications