சிவகங்கை எஸ்.பி. பன்னீர் செல்வத்திற்கு குடியரசுத் தலைவர் விருது

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை எஸ்.பி. பன்னீர் செல்வத்தின் 35 ஆண்டு கால பணியைப் பாராட்டி அவருக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படவிருக்கிறது.

பனனீர் செல்வம் கடந்த 1976ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணியில் சேர்ந்தார். பின்பு 1989 ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். அதையடுத்து 2000ல் டி.எஸ்.பி.யாகவும், 2010ல் கூடுதல் எஸ்.பி.யாகவும் பதவி உயர்வு பெற்றார்.

முன்னதாக 2009ம் ஆண்டு டி.எஸ்.பி. யாக இருந்தபோது அவருக்கு தமிழக அரசு சார்பில் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. இதன் காரணமாக 2011ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று சிவகங்கை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார்.

அவர் சைபர் கிரைம், ஏ.டி.எம். திருட்டு போன்ற வழக்குகளில் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடிப்பதில் பலே கில்லாடியாக உள்ளார். சைபர் கிரைம் பிரிவில் சிறப்பாக பணியாற்றியதால் சிங்கப்பூரில் நடைபெற்ற தேசிய குற்றத்தடுப்பு குறித்த கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் அவரது 35 ஆண்டு கால பணியைப் பாராட்டும் விதமாக குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படவிருக்கிறது.

இதையடுத்து அவருக்கு சக போலீஸ் அதிகாரிகளும், உயர் போலீஸ் அதிகாரிகளும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+