ஐ.நா. பாதுகாப்பு சபையை விரிவுபடுத்த வேண்டும்-ஜி-4 நாடுகள் கூட்டாக போர்க்கொடி
நியூயார்க்: ஐ.நா பாதுகாப்பு சபையை விரிவுபடுத்த வேண்டும் என்று இந்தியா, ஜப்பான், பிரேசில் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி-4 அமைப்பு கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஜி.4 நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு சபையில் நிரந்தர மற்றும் நிரந்தரமில்லா என்ற இரண்டு பிரிவுகளிலுமே உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆப்பிரிக்க நாடுகளையும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பு நாடாக இணைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற ஜி.4 நாடுகளின் நிலைப்பாட்டில் தற்போதும் உறுதியாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் ஜி.4 நாடுகளின் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டுக்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. சீனா தொடர்ந்து ஐ.நா. சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து விடுமே என்ற அச்சமே இதற்குக் காரணம்.












Click it and Unblock the Notifications