ரோசய்யா உரையுடன் நாளை கூடுகிறது சட்டசபை
சென்னை: தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. ஆளுநர் ரோசய்யா உரை நிகழ்த்தவிருக்கிறார்.
14வது தமிழக சட்டசபையின் 3வது கூட்டத் தொடர் நாளை துவங்குகிறது. இந்த கூட்டம் காலை 10 மணிக்கு துவங்கும். இந்த ஆண்டில் நடக்கும் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் ரோசய்யா உரையாற்றுகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஆளுநராக பொறுப்பேற்ற ரோசய்யா முதல் முறையாக சட்டபசபையில் உரையாற்றுகிறார்.
கடந்த ஆண்டில் அரசு நிறைவேற்றிய திட்டங்கள், தற்போது நடந்துவரும் வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் புதிய அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெறும் என்று கூறப்படுகின்றது.
ஆளுநர் தனது உரையில் கூடங்குளம் மற்றும் முல்லைப் பெரியாறு ஆகிய பிரச்சனைகளில் அரசின் அணுகுமுறைகள் குறித்தும், தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்தும், நிவாரணப் பணிகள் குறித்தும் குறிப்பிடுவார் என்று தெரிகிறது. முதல் நாள் கூட்டம் ஆளுநர் உரையுடன் முடிந்துவிடும்.
அதன் பிறகு சட்டசபையின் அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யும். இந்த கூட்டத் தொடர் ஒரு வாரம் நடக்கும் என்று தெரிகிறது. இதையடுத்து 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாத துவகத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications