பிளாஸ்டிக் சாலைகளை அதிகரிக்க விரிவான திட்டம்: ஆளுநர் ரோசய்யா
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு அமைக்கப்பட்டு வரும் சாலைகளை விரிவாக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும் என்று சட்டப்பேரவையில் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.
"பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு பரிசோதனை அடிப்படையில் தார் சாலைகளை அமைப்பதற்கு 50 கோடி ரூபாயையும் இந்த அரசு கடந்த நிதிநிலை அறிக் கையில் ஒதுக்கியிருந்தது. இம்முயற்சியின் விளைவாக, பிளாஸ்டிக் கழிவுகளைக்கொண்டு 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 146 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன" என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுத்து, நீடித்த பயன் தரும் இது போன்ற சாலைகளை பெருமளவில் அமைக்க விரிவானதொரு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது..












Click it and Unblock the Notifications