பஞ்சாப், உத்தரகண்டில் சட்டசபை தேர்தல் போர் தொடங்கியது!

பஞ்சாபில் அகாலி தளம், பாஜக கூட்டணிக்கு எதிராகவும், உத்தரகண்டில் பாஜகவை எதிர்த்தும் காங்கிரஸ் களம் கண்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பஞ்சாபில் 417 சுயேட்சைகள், 93 பெண்கள் உள்பட 1,078 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பஞ்சாபில் தேர்தல் அமைதியாக நடக்க 200 கம்பெனி துணை ராணுவத்தாரை தேர்தல் ஆணையம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. மேலும் 71,000 பாதுகாவலர்களும் அசம்பாவிதங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளவிருக்கின்றனர். எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் முனைப்பாக உள்ளது.
முதல்வர் அமரிந்தர் சிங், துணை முதல்வர் சுக்பிர் பாதல், மன்ப்ரீத பாதல், அமரிந்தந்தரின் மகன் ரனின்தர் சிங், முன்னாள் முதல்வர் ராஜிந்தர் கௌர் பட்டால், முதல்வரின் தலைமைச் செயலாளராக இருந்த டிஎஸ் குரு, முன்னாள் டிஜிபி பிஎஸ் கில் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
உத்தரகண்டில் பாஜக முதல்வர் பிசி கந்தூரி தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார். அவர் கோட்வாரில் காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்திர சிங் நெகியை எதிர்த்து போட்டியிடுகிறார். முன்னதாக மணிப்பூரில் கடந்த 28ம் தேதி தேர்தல் நடந்தது.
வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை 7 கட்டங்களாக உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடக்கவிருக்கிறது. வரும் மார்ச் மாதம் 6ம் தேதி 5 மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications